சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி விழாவை தொடங்கினர். பின்னர், விழாவில் கலந்துகொண்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்ததால், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.