திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகியவாலிபருக்கு தர்மஅடி

6பார்த்தது
திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகியவாலிபருக்கு தர்மஅடி
தாரமங்கலம் அருகே எட்டிகுட்டைமேடு பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி அர்ஜூன் (23), சேலம் அழகாபுரத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார். இது தெரியவந்ததும், அப்பெண்ணின் கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் நின்ற அர்ஜூனை தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அர்ஜூன் அளித்த புகாரின் பேரில், பெண்ணின் கணவர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி