ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 74). இவருடைய மகன் செந்தில்குமாருக்கும், பேரன் லிங்கேஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறை விலக்கிவிடுவதற்காக ரங்கராஜ் சென்றுள்ளார்.
அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரங்கராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ரங்கராஜ் மனைவி சந்தோசம் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.