ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி ஊராட்சி கரட்டு குறை பகுதியில், தம்பிதுரை எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. மணி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கியதுடன், ரேஷன் கடை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.