ஓமலூர் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். மேலும், மானியத்தில் கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திரன் உறுதியளித்தார்.