ஓமலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

2பார்த்தது
ஓமலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ராக்கிபட்டியை சேர்ந்த விக்னேஷ்குமார்-புவனேஸ்வரி தம்பதியினர் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததால் மனமுடைந்த புவனேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புவனேஸ்வரியின் அக்காள் கவுரி அளித்த புகாரின்பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி