சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கோட்டக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி அலமேலு (67). கணவர் இறந்துவிட்ட நிலையில், மகன் ராஜ்குமாருடன் வசித்து வந்தார். அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்த அலமேலு, வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்து அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டார். விஷம் குடித்து உயிருக்கு போராடிய அவரை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.