ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய அளவிலான மின்னணு கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 339 மூட்டைகளில் 151.21 குவின்டால் கொப்பரை கொண்டு வரப்பட்டது. 51 விவசாயிகள் மற்றும் 5 வியாபாரிகள் பங்கேற்றனர். அதிகபட்சமாக கிலோ ரூ. 130.19, குறைந்தபட்சமாக ரூ. 106.19, சராசரியாக ரூ. 127.19க்கு விற்பனையானது. மொத்தம் ரூ. 18,18,941க்கு வர்த்தகம் நடைபெற்றது. விவசாயிகள் விளைப் பொருட்களை உடனடியாக விற்காமல், இருப்பு வைத்து குறைந்த வட்டியில் கடன் பெற ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி அழைப்பு விடுத்துள்ளார்.