ஓமலூர் கிழக்கு ஒன்றிய தி. மு. க. சார்பில் இறகு பந்து போட்டி

60பார்த்தது
ஓமலூர் கிழக்கு ஒன்றிய தி. மு. க. சார்பில் இறகு பந்து போட்டி
சேலம் மாவட்டம் ஓமலூர் கிழக்கு ஒன்றிய தி. மு. க. சார்பில் முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இரட்டையர் இறகு பந்து போட்டி, 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்டி- சேலை, ஹாட் பாக்ஸ் வழங்கும் விழா 14-வது வார்டு மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் நடந்தது. ஓமலூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு இரட்டையர் இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வேட்டி, சேலை, ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி