ஓமலூர் வக்கீல் சங்கத்தினர் போலீஸ்ஸ்டேஷன் முன்பு ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
ஓமலூர் வக்கீல் சங்கத்தினர் போலீஸ்ஸ்டேஷன் முன்பு ஆர்ப்பாட்டம்
ஓமலூரில் காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில், தன்னை ஒரு வக்கீல் தாக்கியதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் அளித்த புகாரின் பேரில், வக்கீல் உட்பட இருதரப்பிலும் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓமலூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதாகவும், அவரை ஜாமீனில் விடுவிக்க கோரியும் ஓமலூர் கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.