ஓமலூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

2பார்த்தது
ஓமலூர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
ஓமலூரை அடுத்த கே. மோரூர் பகுதியில் முனியப்பன் கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் தறி தொழிலாளி சிவகுமார் (33) உயிரிழந்தார். எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி