சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சி ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் கவுதம் (20), தீவட்டிப்பட்டியில் பெயிண்டிங் வேலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் டேனிஷ்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காடையாம்பட்டி சந்தைப்பேட்டை அருகில் செங்கல் சூளையில் இருந்து வந்த லாரியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில், கவுதம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.