ஓமலூர் அருகே ஆடுகளை திருடிய வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்

1183பார்த்தது
ஓமலூர் அருகே ஆடுகளை திருடிய வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கரிசல்பட்டி கிராமத்தில் விவசாயி மணி வளர்த்து வந்த 10 ஆடுகளை திருட முயன்ற இருவர், நாய்கள் குரைத்ததால் விவசாயியால் பிடிக்கப்பட்டனர். பிடிபட்டவர்களில் ஒருவர் தன்னை தவெக நிர்வாகி என்றும், யாரும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் இருவரையும் பிடித்து ஓமலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி