சேலம்: காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப மனு

50பார்த்தது
சேலம்: காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப மனு
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். நியமனத் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு ஒன்று கொடுத்தனர். .

அதில், அரசு அறிவித்தபடி ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ்மொழித் தேர்வு, நியமனத் தேர்வு உள்ளிட்டவைகளில் தேர்ச்சி பெற்று தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். 

ஆனால் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர். அவர்களுக்குப் பதிலாக நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தொகுப்பூதியத்தில் அரசு பணியமர்த்த வேண்டும். மேலும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி