சேலம் தாரமங்கலத்தைச் சேர்ந்த காயத்ரி, நாமக்கல் மாவட்டம் வெப்படையைச் சேர்ந்த கௌதமுக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது. கர்ப்பிணியாக இருந்த காயத்ரி, யுகாதி பண்டிகைக்கு தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று, கணவர் கௌதம் செல்போனில் நீண்ட நேரம் பேசியதால் மனமுடைந்த காயத்ரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொளசம்பட்டி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.