சேலத்தில் சாயப்பட்டறைகள் எதிர்ப்பு: வேல்முருகன் கண்டன ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
சேலத்தில் சாயப்பட்டறைகள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு, தனது குழந்தைகளை இழந்தாலும் பரவாயில்லை, தனக்கு பிடித்த நடிகர் வீடியோ காலில் பேசியதற்கும், நேரில் பார்த்ததற்கும் மகிழ்ச்சி அடையும் கற்புக்கரசிகள் உள்ள தற்குறிகூட்டமாக தமிழ் சமூகம் மாறிவிட்டதாக மறைமுகமாக நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை குறிப்பிட்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.