சாயப்பட்டறை வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

சேலம் வெள்ளக்கல்பட்டி டால்மியா போர்டு பகுதியில் உள்ள ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில், அருள் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று ஜவுளி பூங்கா வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பசுமைப் பகுதியான இங்கு சாயப்பட்டறை வைத்தால், சாயக்கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். எனவே, சாயப்பட்டறை அமைக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.
