ஓமலூர்: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்

3பார்த்தது
ஓமலூர் அடுத்த ஆர்.சி.செட்டிப்பட்டியில் உள்ள தொழுநோய் நிவாரண ஊரக மையத்தில், மதுரை குழந்தை இயேசு மாநில சமூக பணிக்குழு மற்றும் ஓமலூர் பாத்திமா கன்னியர் இல்ல அருட்சகோதரிகள் இணைந்து, தொழுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட 120 பயனாளிகளுக்கு 2.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மளிகை சாமான்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்வுக்கு அருட்தந்தை விமல் தலைமை தாங்கினார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி