ஓமலூர் அருகே பச்சனம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு, துர்நாற்றம், ஈக்கள் தொல்லை ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்களுக்கு நோய் பாதிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து, நேற்று ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாரிடம் மனு அளித்தனர். பின்னர் கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு வாங்க மறுத்ததால், அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.