சேலம் மாவட்டம் ஓமலூர் போக்குவரத்து சிக்னல் அருகே, சாலையோரம் நோ பார்க்கிங் எச்சரிக்கை பலகையை மதிக்காமல் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் சாலையோர கடைகளால் பொதுமக்களுக்கு போதிய நடைபாதை வசதி இல்லை. கனரக வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக பேரிகார்டு வைக்கப்பட்டுள்ள குறுகிய சாலை வழியே பொதுமக்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.