சேலம்- கொச்சி விமானம் திடீரென ரத்து: பயணிகள் கடும் அவதி

2பார்த்தது
சேலம்- கொச்சி விமானம் திடீரென ரத்து: பயணிகள் கடும் அவதி
சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, சேலம், கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நேற்று மாலை கொச்சி செல்ல டிக்கெட் பதிவு செய்திருந்தனர். ஆனால் திடீரென கொச்சி விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்து, விமான நிலைய வளாகத்தில் செய்வதறியாது தவித்தனர். அடிக்கடி விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் சேலத்தில் இருந்து கேரளா, பெங்களூரு செல்பவர்கள் விமான பயணத்தை விரும்புவதில்லை என பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி