இடங்கணசாலை நகர தி.மு.க. சார்பில் காடையாம்பட்டியில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். நகர மகளிர் அணி அமைப்பாளர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேசிய டி. எம். செல்வகணபதி எம்.பி., வெல்லும் தமிழ்ப்பெண்கள் ஒவ்வொரு வீடாக சென்று அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி தி.மு.க. அரசுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.