சேலம் மாவட்டம் ஓமலூரில், ஓமலூர்-மேச்சேரி பிரதான மாநில நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் மேம்பாலம் கட்டப்படாததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ரயில்கள் கடக்கும்போது கேட் மூடப்படுவதால் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.