ஓமலூர் பச்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்த நித்தியாவின் மகள் லத்திகாவுக்கும், ஈஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜுக்கும் 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களான ராமன், சபரிவாசன் ஆகியோர் லத்திகாவை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு நித்தியாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். மேலும், நித்தியாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஓமலூர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.