ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வீடுகளில் திருநங்கைகள் அடாவடியாக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆட்டோக்களில் வரும் திருநங்கைகள், குறைந்தது 5000 ரூபாய் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் மேலும் பல திருநங்கைகள் வந்து பிரச்சனை செய்வார்கள் என்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.