சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி தாலுகா தீவட்டிப்பட்டி காவல் நிலையம் அருகே சிவன் பேக்கரி என்ற டீக்கடையை வேலு என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது டீக்கடையில் சஞ்சீவ்ரெட்டி என்பவருக்கும் அங்குள்ள போதைப் பொருள் கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் சஞ்சீவ்ரெட்டி என்பவரை போதைப் பொருள் கும்பல் கொடூரமாக கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் டீக்கடையில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசார் போதைப் பொருள் கும்பலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவட்டிப்பட்டி காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.