ஓமலூர் பேருந்து நிலையம் அருகே இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற 54 ஆம் ஆண்டு துவக்க விழாவில், தொண்டர் ஒருவர் மின் ஒளி கம்பத்தில் ஏறி கட்சிக்கொடியை காட்டி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பற்ற முறையில் அவர் செயல்பட்டதால் மேடையில் இருந்த நிர்வாகிகள் அவரை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் பதற்றம் நிலவியது.