ஓமலூரில் தி. மு. க. பொதுக்கூட்டம் நல உதவிகள்

62பார்த்தது
ஓமலூரில் தி. மு. க. பொதுக்கூட்டம் நல உதவிகள்
ஓமலூர் பஸ் நிலைய வளாகத்தில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஓமலூர் பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். 

ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி, தி.மு.க. பேச்சாளர் நவீன், ஓமலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முன்னாள் எம்.பி. சுகவனம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் 1,500 பயனாளிகளுக்கு ஹாட் பாக்ஸ், 10 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 10 சவரத்தொழிலாளிகளுக்கு நல உதவிகள் என சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நல உதவிகள் வழங்கப்பட்டன. 

தொடர்ந்து முதல்வர் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கட்டுரை, கபடி, கைப்பந்து மற்றும் பேச்சுப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் குமரன் மணி, காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓமலூர் பேரூராட்சி தலைவர் செல்வராணி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி