சேலம்: விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய காட்டெருமைகள்

54பார்த்தது
சேலம்: விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய காட்டெருமைகள்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை, கூ. குட்டப்பட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஏற்காடு மலைப்பகுதியை ஒட்டி உள்ளன. ஏற்காடு வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுப்பன்றி, முயல், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. டேனிஷ்பேட்டை உள்கோம்பை அடிவாரம் பகுதிகளில் வத்தியூர், பாலமேடு இடையே செல்லும் சரபங்கா ஆற்றுப் படுக்கையில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. 

வாழை, பாக்கு, தீவனப் பயிர்கள், நெல், சோளம், ராகி ஆகிய பயிர்கள் சேதமடைந்தன. இவற்றைத் துரத்த விவசாயிகள் சென்றால் காட்டெருமைகள் தாக்குகின்றன. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி