ஓமலூர் அருகே குதிரைகுத்திபள்ளம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் நிலத்தில், அவரது உறவினர் பழனிசாமியின் நிலத்தில் படர்ந்திருந்த செடி, கொடிகளை கோவிந்தசாமி தனது நிலத்தின் பக்கம் விட்டதால் தகராறு ஏற்பட்டது. இதைக்கண்ட பழனிசாமியின் மனைவி லதா, கோவிந்தசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த கோவிந்தசாமி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவை கைது செய்துள்ளனர்.