தர்மபுரி பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா, தனது கணவர் பாரதிதாசனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கடந்த 2024 முதல் தனது மகள் பவ்யா ஸ்ரீ மற்றும் மகன் நவாரதன் ஆகியோருடன் ஓமலூர் அருகே தாராபுரம் செட்டியார் தெருவில் தந்தை அன்பழகன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6 ஆம் தேதி காலை கடைக்கு செல்வதாக கூறி சென்ற ஐஸ்வர்யா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியும் கிடைக்காத நிலையில், ஓமலூர் போலீசார் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.