மகளிர் இலவச பயண திட்டம் படிப்படியாக அறிவிக்கப்படும்

1பார்த்தது
மகளிர் இலவச பயண திட்டம் படிப்படியாக அறிவிக்கப்படும்
சென்னையில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வன் ஆகியோர் சேலத்திற்கு விமானத்தில் வந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தமிழக முதல்-அமைச்சர் ஆலோசனையின்படி, போக்குவரத்து துறையை முதன்மை துறையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், அனைத்து அரசு பஸ்களிலும் மாநிலம் முழுவதும் மகளிர் இலவச பயணம் குறித்த கேள்விக்கு, இதுகுறித்து விரைவில் படிப்படியாக அறிவிக்கப்படும் என்றும், ஒவ்வொன்றாக செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி