வீட்டுக்கு பெயிண்டு அடித்த போது தவறி விழுந்த தொழிலாளி சாவு

2பார்த்தது
வீட்டுக்கு பெயிண்டு அடித்த போது தவறி விழுந்த தொழிலாளி சாவு
சேலம் அன்னதானப்பட்டி நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை (39) என்ற பெயிண்டர், கருப்பூர் தட்டாஞ்சாவடி பகுதியில் திவாகர் என்பவரது வீட்டில் பெயிண்டிங் வேலை செய்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி