ஓமலூரைச் சேர்ந்த தொழிலாளி கண்ணன், காவல் நிலையம் முன்பு தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தான் த.வெ.க. நிர்வாகி என்றும், தான் கஷ்டப்பட்டு வாங்கிய மதுபாட்டிலை போலீசார் பிடுங்கி உடைத்துவிட்டதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறையினரின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றார்.