ஓமலூர் அருகே நகை, மொபட் திருடிய வாலிபர் கைது

4பார்த்தது
ஓமலூர் அருகே நகை, மொபட் திருடிய வாலிபர் கைது
ஓமலூர் அடுத்த சந்தை தடம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் குழந்தை காதணி விழாவுக்கு வந்த மாமியார் கருப்பாயி, தனது அரை பவுன் தாலியை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினார். மறுநாள் காலை தாலியைக் காணாததால் அதிர்ச்சியடைந்தார். மேலும் முருகனின் மொபட்டும் திருடு போனது. இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, பல்பாக்கி மொரப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (22) என்பவரை மூதாட்டியின் தாலி மற்றும் மொபட்டைத் திருடியதாகக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி