சேலம் மாவட்ட தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் கவுதம், திருச்சி மாவட்ட தரக்கட்டுப்பாட்டு பிரிவு உதவி இயக்குனர் மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள உர விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தினர். அதன்படி உரம் இருப்பு, கொள்முதல் ஆவணங்களை பார்வையிட்டனர். அப்போது பல்வேறு உர விற்பனை கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவது தெரிந்தது. இதுகுறித்து சேலம் உதவி இயக்குனர் கவுதம் கூறும்போது, மாவட்டத்தில் யூரியா பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரக்கடை உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் விதிகளை மீறியும், கூடுதல் விலைக்கும் உரங்கள் விற்பனை செய்த 13 உரக்கடைகளுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.