சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெருவைச் சேர்ந்த மணி (42) என்பவர், தனது உறவினர் ஜேபி மூலம் மம்முத் என்பவரிடம் டூவீலரை அடமானம் வைத்து ரூ. 10 ஆயிரம் பெற்றார். பணத்தை திருப்பித் தருவது தொடர்பாக மணிக்கும் மம்முத், அவரது மகன் இர்பான் ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த 14-ந் தேதி, ஜேபியிடம் பணத்தை கேட்டு மம்முத், இர்பான் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மணி மற்றும் மம்முத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.