சேலத்தில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அம்மாபேட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த இப்ராகீம்(21) மற்றும் சிக்கந்தர்(48) ஆகியோரை கைது செய்தனர்.