சேலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வீராணம் கோட்டை தெருவில் ரோந்து சென்றனர். அப்போது முதியவர் மதுபானம் பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 74) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சேலம் டவுன் போலீசார் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாக பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற சுக்கம்பட்டியை சேர்ந்த கண்ணன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.