சேலத்தில் காப்பர் ஓயர் திருடிய 2 பேர் கைது

615பார்த்தது
சேலத்தில் காப்பர் ஓயர் திருடிய 2 பேர் கைது
சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (49) தாதனூரில் உள்ள கல்லூரி கேண்டீனில் மேலாளராக பணிபுரிகிறார். இவர்களது கேண்டீனில் இருந்து 17 கிலோ காப்பர் ஒயர் மற்றும் ஒரு டூவீலரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வீராணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா (19) மற்றும் கேசவன் (21) ஆகியோர் கல்லூரி கேண்டீனில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து காப்பர் ஒயரை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி