சேலத்தில் வெள்ளி கம்பிகளை திருடிய 2 பேர் கைது

0பார்த்தது
சேலத்தில் வெள்ளி கம்பிகளை திருடிய 2 பேர் கைது
சேலம் சீலநாயக்கன்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை உரிமையாளர் சரவணன் (45) என்பவரின் பட்டறையில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பிலான 4 கிலோ 700 கிராம் வெள்ளி கம்பிகள் திருட்டு போனது. இது குறித்து அவர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பட்டறையில் வேலை செய்து வந்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்தி (25) மற்றும் பனமரத்துப்பட்டி ஆனந்த் (26) ஆகியோர்தான் வெள்ளி கம்பிகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி