சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (54) என்பவர் தனது புதிய கட்டிடத்திற்கு வாங்கியிருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள ஒயர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருட்டுப் போனது. இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு தாதகாப்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) மற்றும் சரவணன் (30) ஆகியோரை ஒயர் திருடியதாகக் கைது செய்தனர்.