சேலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

5பார்த்தது
சேலத்தில் கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் அயோத்தியாப்பட்டணம் காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற சுரேஷ் (25) மற்றும் நீலமேகன் (27) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில், அவர்கள் அடிக்கடி கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணை கமிஷனர் அங்கித்சிங் பரிந்துரைத்தார். இதை ஏற்று, கமிஷனர் அனில் குமார் கிரி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி