சேலத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.. 2 பேர் கைது

54பார்த்தது
சேலத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.. 2 பேர் கைது
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், சரவணகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பூலாவரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வேன் டிரைவரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொட்டிப்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 34), செல்வமணி (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் சுமார் 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக சிவராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி