சேலத்தில் கோர்ட்டை அவமதித்த 2 பெண்கள் கைது

2பார்த்தது
சேலத்தில் கோர்ட்டை அவமதித்த 2 பெண்கள் கைது
சேலம் தாதுபாய்குட்டை பகுதியை சேர்ந்த செண்பக வடிவு (51) மற்றும் அவரது தங்கை ஸ்ரீதேவி (48) உட்பட 4 பேரை 2010-ம் ஆண்டு அடிதடி வழக்கில் சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்தது. நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, நீதிபதி திருமால் தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், ஸ்ரீதேவி மற்றும் செண்பக வடிவு ஆகியோர், 'நீங்கள் கூறும் தீர்ப்பு எங்களுக்கு தேவையில்லை' என கூச்சலிட்டனர். இதனால் கோர்ட் அவமதிப்பு செய்ததாக கூறி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி