சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

400பார்த்தது
சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி அஸ்கர் (32) நேற்று முன்தினம் இரவு காந்திசிலை அருகே நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, வசந்தகுமார் (25) மற்றும் கோகுல்ராஜ் (21) ஆகியோர் வந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த இருவரும் அஸ்கரை தாக்கியுள்ளனர். காயமடைந்த அஸ்கர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமார், கோகுல்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி