சலத்தில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

0பார்த்தது
சலத்தில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
சேலம் கோரிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கன்னங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி மற்றும் போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பியோடிய கார்த்திக் ராஜா (23) மற்றும் சவுந்தரபாண்டியன் (27) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இவர்கள் மும்பையில் இருந்து தண்ணீரில் கலந்து நரம்பு வழியாக ஏற்றும் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. கன்னங்குறிச்சி போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி