வார இறுதி நாட்களை யொட்டி சேலம் கோட்டத்தில் 200சிறப்பு பஸ்கள்

0பார்த்தது
வார இறுதி நாட்களை யொட்டி சேலம் கோட்டத்தில் 200சிறப்பு பஸ்கள்
வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி