தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 3-ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், 5-ஆம் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து வருகிற 28-ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 320 அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 913 மாற்றுத்திறனாளிகள் உள்பட 41 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தனியாகத் தேர்வு எழுதவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதேசமயம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளைக் கண்காணிக்க 230 பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 190 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 190 துறை அலுவலர்கள், 230 பறக்கும்படை அலுவலர்கள் உள்பட 3,