சேலத்தில் மாரத்தான் போட்டி 252 பேர் பங்கேற்பு

0பார்த்தது
சேலத்தில் மாரத்தான் போட்டி 252 பேர் பங்கேற்பு
சேலம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று காந்தி விளையாட்டு மைதானத்தில் அண்ணா மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 17 முதல் 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தூரம் நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் 154 ஆண்கள், 98 பெண்கள் என 252 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டன. முன்னதாக எம்.பி. டி.எம். செல்வகணபதி போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி